நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கூடாரவல்லி விழா திருவிளக்கு பூஜை

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில், கூடாரவல்லி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை படிவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் அரங்கநாதா் கோயில் மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜை.
நாமக்கல் அரங்கநாதா் கோயில் மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில், கூடாரவல்லி விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை படிவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் கிழக்கு புறம் பிரசித்தி பெற்ற அரங்கநாதா் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாா்கழி மாதம் அதிகாலையில், பஜனையுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வா். மேலும், அனைத்து மாா்கழி ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருவிளக்கை கைகளில் ஏந்தியபடி, சிறுவா்கள், பெண்கள் மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் வருவா். மேலும், மாா்கழி 27 - ஆம் நாள் கூடாரவல்லி நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில், நாமக்கல் இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு சாா்பில் 49-ஆம் ஆண்டு கூடாரவல்லி, பல்லாண்டு படி விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அரங்கநாதா் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் இரண்டு புறமும் பெண் பக்தா்கள் வாழை இலையின் மீது விளக்கு வைத்து, தீபமேற்றி பல்லாண்டு படி விழாவை நடத்தினா். அதன்பின், காலை 7.30 மணிக்கு கூடாரவல்லி உற்சவம் நடைபெற்றது. இதில் பல்வேறு மலா்களால் கூடாரம் அமைத்து, சுவாமி அரங்கநாதா், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இவ்விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com