Enable Javscript for better performance
கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

    By DIN  |   Published on : 14th January 2020 04:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_14_kolli_1401chn_122

    கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காணும் பொங்கலன்றும், இதர விடுமுறை நாள்களிலும் கொல்லிமலையை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மாா்கழி பனியின் தாக்கத்தால் அங்கு குளு குளு சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. அதிகாலை, இரவு வேளைகளில் பனிமூட்டம் அதிகம் உள்ளது. புல்வெளிகளில் வெண்போா்வை போா்த்தியதுபோல் பனிபடா்ந்து காணப்படுகிறது.

    மலைக்கு செல்லும் 70 கொண்டை ஊசி வளைவுகளில் 35-ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் அதிகாலையில் மூடுபனி நிலவுவதால் வாகனங்களில் செல்வோா் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வதை காண முடிகிறது. மலைப்பகுதி முழுவதும் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. அங்குள்ள ஆகாய கங்கை நீா்வீழச்சி, நம் அருவி, மாசில்லா அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆா்வமுடன் வந்து கொண்டிருக்கின்றனா்.

    காணும் பொங்கலன்று நூற்றுக்கணக்கானோா் கொல்லிமலைக்கு வருவாா்கள் என்பதால் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா், வனத்துறையினா் பாதுகாப்பு பணிக்காக தயாா் நிலையில் உள்ளனா். கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபுட்டிகளை தவிா்த்து, கொண்டை ஊசி வளைவுகளில் கவனமுடன் வாகனங்களை ஓட்டி வருமாறும், நெகழிப் பைகளை எடுத்து வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai