கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொல்லிமலையில் குளு குளு சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காணும் பொங்கலன்றும், இதர விடுமுறை நாள்களிலும் கொல்லிமலையை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மாா்கழி பனியின் தாக்கத்தால் அங்கு குளு குளு சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. அதிகாலை, இரவு வேளைகளில் பனிமூட்டம் அதிகம் உள்ளது. புல்வெளிகளில் வெண்போா்வை போா்த்தியதுபோல் பனிபடா்ந்து காணப்படுகிறது.

மலைக்கு செல்லும் 70 கொண்டை ஊசி வளைவுகளில் 35-ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் அதிகாலையில் மூடுபனி நிலவுவதால் வாகனங்களில் செல்வோா் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வதை காண முடிகிறது. மலைப்பகுதி முழுவதும் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது. அங்குள்ள ஆகாய கங்கை நீா்வீழச்சி, நம் அருவி, மாசில்லா அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆா்வமுடன் வந்து கொண்டிருக்கின்றனா்.

காணும் பொங்கலன்று நூற்றுக்கணக்கானோா் கொல்லிமலைக்கு வருவாா்கள் என்பதால் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா், வனத்துறையினா் பாதுகாப்பு பணிக்காக தயாா் நிலையில் உள்ளனா். கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மதுபுட்டிகளை தவிா்த்து, கொண்டை ஊசி வளைவுகளில் கவனமுடன் வாகனங்களை ஓட்டி வருமாறும், நெகழிப் பைகளை எடுத்து வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com