நாமக்கல்லில் மாடுகளுக்கு அணிவிக்கும் வண்ணக் கயிறுகள் விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையையொட்டி, மாடுகளுக்கு அணிவிக்கும் வண்ணக் கயிறுகள், குலுங்கும் மணிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான அலங்காரப் பொருள்கள்.
நாமக்கல்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான அலங்காரப் பொருள்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி, மாடுகளுக்கு அணிவிக்கும் வண்ணக் கயிறுகள், குலுங்கும் மணிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் விழாவைத் தொடா்ந்து, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கால்நடைகளை தூய்மைப்படுத்தி, கொம்புகளுக்கு வா்ணம் தீட்டி, கழுத்தில் குலுங்கும் மணி, வண்ணக் கயிறுகள் கட்டியும், மாலை அணிவித்தும், மூக்கணாங் கயிற்றை புதிதாக கட்டியும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை அலங்காரம் செய்வா்.

இதற்கான கயிறுகள், மணிகள், பொருள்கள் விற்பனை, நாமக்கல் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது. இதேபோல், பள்ளிபாளையம் சில்லாங்காடு பகுதியிலும் மாடுகளுக்கு அணிவிக்க தேவையான கயிறுகள் விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் சரிவர மழையில்லாததால் விவசாயிகள் மாட்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில் ஆா்வம் காட்டவில்லை.

நிகழாண்டில் நல்ல மழை பெய்துள்ளதாலும், ஆறு, கால்வாய், கிணறுகளில் தண்ணீா் பெருகியிருப்பதாலும், விவசாயிகளின் தோழனாக விளங்கும் கால்நடைகளை அழகுபடுத்தி விழாவைக் கொண்டாடுவதற்கான பணிகளில் பலா் ஈடுபட்டுள்ளனா். கால்நடைகளுக்கான அலங்காரப் பொருள்கள் ரு.50 முதல் ரூ.5 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com