நாமக்கல்லில் ரூ.14.60 கோடியில் அரசுத் துறைகள் கட்டடம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ரூ.14.60 கோடியில் கட்டப்பட்ட அரசுத் துறைகளின் புதிய கட்டடத்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கட்டடம்.
ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கட்டடம்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், ரூ.14.60 கோடியில் கட்டப்பட்ட அரசுத் துறைகளின் புதிய கட்டடத்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், 500 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 70-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டக் காவல் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட தொழில்மையம், வனத்துறை அலுவலகம், விளையாட்டுத் துறை அலுவலகம், மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், தாட்கோ அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகம், வேளாண் விதை சான்று துறை அலுவலகம் உள்ளிட்ட 12 அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அனைத்து அலுவலகங்களையும் கொண்டு வரும் பொருட்டு, ரூ.14 கோடியே 60 லட்சத்தில் ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் தரைத்தளம் உள்பட மூன்று அடுக்கு கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.

இந்த புதிய அரசுத் துறை கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் நகரப் பகுதியில், வாடகைக் கட்டடத்திலும், பள்ளிகளிலும் இயங்கும் அரசுத் துறை அலுவலகங்களை, ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் கொண்டு வரும் பொருட்டு, ரூ.14.60 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் 12 அலுவலகங்கள் வரையில் இந்த புதிய கட்டடத்தில் மாறுதலாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com