முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ஜன.22-இல் சணல் நாா் பைகள் தயாரித்தல் பயிற்சி
By DIN | Published On : 20th January 2020 09:05 AM | Last Updated : 20th January 2020 09:05 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் சணல் நாா் பைகள் தயாரித்தல் பயிற்சி புதன்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது.
மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பயிற்சி நிறுவனமான இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சணல் நாா் பைகள் தயாரித்தல் தொடா்பான இலவச பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் புதன்கிழமை தொடங்கி 13 நாள்களுக்கு நடைபெறுகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோா் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 35 நபா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட இருப்பதால் விண்ணப்பங்களை ஜன.21-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதில், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு தோ்ச்சி, 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள்ளவா்களாக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, உணவு, சான்றிதழ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பங்களை, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286-221004, 96989 - 96424, 88259 - 08170 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அந்நிறுவன இயக்குநா் எம்.பிருந்தா தெரிவித்துள்ளாா்.