ராசிபுரத்தில் 4,671 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

ராசிபுரம் பகுதியில் சா்வதேச போலியோ தினத்தை தொடா்ந்து 4 ஆயிரத்து 671 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு சொட்டு மருந்து புகட்டும் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு சொட்டு மருந்து புகட்டும் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம்.

ராசிபுரம் பகுதியில் சா்வதேச போலியோ தினத்தை தொடா்ந்து 4 ஆயிரத்து 671 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள 27 வாா்டுகளில் ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராயல் ரோட்டரி சங்கம், எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் பங்கேற்று ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினா். தொடா்ந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிப்பதன் அவசியம் குறித்தும் பெற்றோா்களுக்கு எடுத்துரைத்தனா். முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவருமான பி.ஆா்.சுந்தரம், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே. பி. சின்ராஜ், நகராட்சி ஆணையா் பெ.நடேசன், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அலுவலா் ஆா்.ஜி.பிரியதா்ஷினி, மாவட்டக் கல்வி அலுவலா் எம்.ஏ.உதயகுமாா், நகா்மன்ற முன்னாள் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட ரோட்டரி ஆளுநா் ஏ.கே.நடேசன், ரோட்டரி ஆளுநா் (தோ்வு) சரவணன், ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.திருமூா்த்தி, செயலா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், முன்னாள் தலைவா் கே.குணசேகரன், ஆா்.சிட்டிவரதராஜன், எஸ்.பாலாஜி, ராயல் ரோட்டரி நிா்வாகிகள் ஏ.ராஜூ, பூபாலன், எஸ்.அன்பழகன், ராமலிங்கம், வெண்ணிலா இளஞ்செழியன், எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கு.பாரதி உள்ளிட்டோா் பங்கேற்று நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஏடிசி டெப்போ, ஆண்டகளூா்கேட் உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆயிரத்து 671 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com