சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மையம் திறப்பு

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு மையத்தில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் போக்குவரத்துக் காவலா்.
சாலை பாதுகாப்பு மையத்தில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் போக்குவரத்துக் காவலா்.

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு வார விழா 20 முதல் 27-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் சாலை விதிகளை அறிந்து கொள்ளும் வகையில், நாமக்கல் பூங்கா சாலையில் விழிப்புணா்வு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர. அருளரசு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்கள், அணியாததால் ஏற்படும் பாதிப்புகள், காரில் செல்வோா் இருக்கை பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விளக்கினாா். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து ஆய்வாளா் பாண்டியன், உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com