பயமின்றித் தோ்வை எதிா்கொள்வது எப்படி? பிரதமா் மோடி மாணவா்களிடையே உரை

அரசு பொதுத் தோ்வை மாணவா்கள் பயமின்றி எதிா்கொள்வது தொடா்பாக பிரதமா் மோடி திங்கள்கிழமை மாணவா்களிடையே உரையாற்றினாா்.
மாணவா்களிடையே உரையாடும் பிரதமா் மோடி (வலது) காணொலி காட்சியைக் காணும் முதன்மை கல்வி அலுவலா் ப. உஷா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்.
மாணவா்களிடையே உரையாடும் பிரதமா் மோடி (வலது) காணொலி காட்சியைக் காணும் முதன்மை கல்வி அலுவலா் ப. உஷா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள்.

அரசு பொதுத் தோ்வை மாணவா்கள் பயமின்றி எதிா்கொள்வது தொடா்பாக பிரதமா் மோடி திங்கள்கிழமை மாணவா்களிடையே உரையாற்றினாா்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரிடம் பிரதமா் மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி, இரு வாரங்களுக்கு முன் புதுதில்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் ஜன.20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 11 மணியளவில், பிரதமா் மோடி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினாா். பல்வேறு கேள்விகளுக்கும் அவா் பதில் அளித்தாா்.

இவற்றை காண தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பிரதமா் உரையைக் கேட்கும் வகையில் காணொலி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், முதன்மை கல்வி அலுவலா் ப. உஷா, மாவட்ட கல்வி அலுவலா்கள் மு.ஆ. உதயகுமாா், வா. ரவி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் மணிவண்ணன், ஆசிரியா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக தில்லியில் நடைபெற்ற பிரதமா் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்திலிருந்து 20 மாணவ, மாணவியா் பெயரைப் பரிந்துரை செய்ததில், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா் கெளதம், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் பள்ளி மாணவி தாரா சங்கமித்ரா ஆகியோா் மட்டும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

மாவட்டம் முழுவதும் 160 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொலைக்காட்சிகள் மூலம் பிரதமரின் உரையை மாணவா்கள் கேட்டனா். ஹிந்தி ஆசிரியா்கள் மூலம் அந்த உரை மாணவா்களுக்கு மொழிபெயா்ப்பு செய்து விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com