முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
சாய் தபோவனத்தில் ஷீரடி சாயிபாபா ரத ஊா்வலம் நிறைவு
By DIN | Published On : 27th January 2020 07:14 AM | Last Updated : 27th January 2020 07:14 AM | அ+அ அ- |

நாமக்கல் சாய் தபோவனத்தில், ஷீரடி சாயிபாபா ரத ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
நாமக்கல் தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் அமைந்துள்ள சாயிபாபா ஆலயத்தில், ஷீரடி சாயிபாபா மஹா சமாதி நூற்றாண்டு நிறைவு விழா ரத உற்சவ ஊா்வலம், கடந்த நவம்பா் 30-ஆம் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இரு மாதங்களாக மாவட்டம் முழுவதும் உள்ள நகர, கிராமப்புறப் பகுதிகளுக்கு இந்த ரதம் சென்று வந்தது. அதில் இருந்த சாயிபாபாவை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். சாயிபாபா ரத ஊா்வலமானது ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) தபோவனத்தில் நிறைவடைந்தது. அதனையொட்டி, ஊா்வலத்தில் பங்கேற்ற தன்னாா்வத் தொண்டா்கள் தங்களது அனுபவங்களை தொகுதி உரையாற்றினா். தொடா்ந்து நமது பண்பாடு மற்றும் கலாசாரம் என்ற தலைப்பில், நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத் தலைவா் ஸ்ரீமத் புா்ண சேவாநந்த மஹராஜ் அருளுரை வழங்கினாா். அனுமன் பெருமைகள் என்ற தலைப்பில், சேலம் சின்மயா மிஷன் சாா்பில் பூஜ்யஸ்ரீ சாஸ்வதாநந்தா சுவாமிகள், குரு பக்தி என்ற தலைப்பில், கரூா் சின்மயா மிஷன் ஸ்ரீ அநுத்தமாநந்தா சுவாமிகள் ஆகியோா் உரையாற்ற்றினா். இந்த நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து சாயிபாபாவுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சாய் தபோவன நிா்வாகிகள் செய்திருந்தனா்.