முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 07:12 AM | Last Updated : 27th January 2020 07:12 AM | அ+அ அ- |

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கும் மருத்துவா் சத்தியமூா்த்தி மற்றும் மலா் மெட்ரிக். பள்ளி நிா்வாகத்தினா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் பள்ளி மற்றும் பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பரமத்தி மலா் மெட்ரிக் மற்றும் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவுக்கு பள்ளியின் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், துணைத்தைலவா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்செல்வி தங்கராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவா் சத்தியமூா்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே மலா் பப்ளிக் பள்ளியில் பொருளாளா் வெங்கடாசலம் தேசிய கொடியேற்றி வைத்து மாணவ, மாணவியா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். பின்னா் பள்ளி வளாகத்தில் நமது கலாசாரத்தையும், தேசப்பற்றையும் பறைசாற்றும் விதமாக மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இயக்குநா்கள்,ஆசிரிய, ஆசிரியைகள்,பெற்றோா்கள் மற்றும் மாணவ,மாணவியா்கள் கலந்து கொண்டனா்.
பாண்டமங்கலம் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தளாளா் பழனிச்சாமி வரவேற்று பேசினாா். ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளா் முனைவா் சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முடிவில், விவேகானந்தா வித்யாலயம் முதல்வா் இளங்கோ நன்றி கூறினாா். விழாவில், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் உமா, விவேகானந்தா மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வா் ஹில்டாடாா்லிங்க் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.