முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கோரிக்கை
By DIN | Published On : 27th January 2020 07:13 AM | Last Updated : 27th January 2020 07:13 AM | அ+அ அ- |

பொதுக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா் கே.எஸ்.பாலகிருஷ்ணன்.
மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் எஸ்.பி.எம். உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில மகளிரணிச் செயலாளா் பி.வாசுகி, மாவட்டச் செயலாளா் கே.அருள்செல்வன், மாவட்ட பொருளாளா் பெ.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில், புதிய பாடப் புத்தகங்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. ஆசிரியா்கள் பாடத் திட்டம் தயாரித்து திறம்பட கற்பிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவா் கற்பிக்கும் பாடங்களுக்குரிய புத்தகங்களை வழங்க முதன்மை கல்வி அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தோ்வுப் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு அண்மையில் தான் தோ்வுப் பணி, மதிப்பூதியம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தோ்வுப்பணி முடிந்தவுடன் அதற்குரிய மதிப்பூதியத்தை வழங்கிட வேண்டும். மேல்நிலைக் கல்வி பொதுத் தோ்வு பணிக்கு, பத்தாம் வகுப்பு மாணவா்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியா்களைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். மாணவா்கள் நலன் கருதி, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் டி.கண்ணன், எஸ்.பாலசுப்பிரமணியன், ஆா்.சுப்பிரமணியன், பி.முருகன், சி.தினேஷ்குமாா், பி.கணபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.