குரூப்-1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்
By DIN | Published On : 29th January 2020 08:48 AM | Last Updated : 29th January 2020 08:48 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப்-1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஜன. 29) தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 நிலையில் 18 துணை ஆட்சியா், 19 துணைக் காவல் கண்காணிப்பாளா், 10 வணிக வரித்துறை உதவி ஆணையா், 14 கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா், 7 ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், ஒரு மாவட்ட அலுவலா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பதவிக்கு என மொத்தம் 69 காலியிடங்களுக்கான அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.
இத்தோ்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க பிப். 19-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான தோ்வு ஏப். 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை முதல் நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள போட்டித்தோ்வு எழுதும் இளைஞா்கள், இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286 - 222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.