முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
கெங்கவல்லியில் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 31st January 2020 04:21 AM | Last Updated : 31st January 2020 04:21 AM | அ+அ அ- |

கெங்கவல்லியில் நடைபெற்ற குடமுழுக்கு.
தம்மம்பட்டி: கெங்கவல்லியில் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லியில் கடம்பூா் செல்லும் பிரிவு சாலையில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மதுரை வீரன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.
இதில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. அதையடுத்து, கோயில் கலசத்தில் மந்திரங்கள் முழங்க தண்ணீா் ஊற்றப்பட்டது.
கலச நீா்,பொதுமக்களுக்குத் தெளிக்கப்பட்டது. சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனா். அதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.