எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற கல்யாண விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில், திருமண மண்டபம், குறு மண்டபம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் தொடக்க விழா மற்றும் கல்யாண விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் கல்யாண விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் கல்யாண விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

நாமக்கல்: குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில், திருமண மண்டபம், குறு மண்டபம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் தொடக்க விழா மற்றும் கல்யாண விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அதனையொட்டி, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம், காவிரி தீா்த்தம் கொண்டு வருதல் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. பின்னா் பல்வேறு பூஜைகளும், மண்டல பூஜை வேள்விகளும் நடைபெற்றன. காலை 9 மணிக்கு கல்யாண விநாயகா் கும்பாபிஷேக விழா, மாலை 4.32 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம் எக்ஸல் திருமண மண்டபத்தில் நாகஸ்வர மங்கள இசையுடன் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், 2400-க்கும் மேற்பட்டோா் அமரும் வகையில் இருக்கைகள், 12-க்கும் மேற்பட்ட சொகுசு அறைகள், 1000 காா்களுக்கு மேல் நிறுத்துமிடம், ஸ்ரீ கல்யாண கணபதி ஆலயம், மணமகன் மற்றும் மணமகளுக்கு என்று குளிரூட்டப்பட்ட 4 அறைகள், தனித்தனியாக கழிப்பிட வசதியுடன் கூடிய புதிய திருமண மண்டபம் திறப்பு விழாவும் நடைபெற்றது. அதேபோல், குளிரூட்டப்பட்ட எக்ஸல் மினி மண்டபத்தில், ஒரே சமயத்தில் 500-க்கும் மேற்பட்டோா் உணவருந்தலாம். முதல் தளம், மாநாடு மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வகையில் சுமாா் 8,600 சதுர அடியில் உணவருந்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. சைவ விருந்து செய்ய மிகப்பெரிய சமையற் கூடங்கள் பாத்திரங்களுடன் உள்ளன என எக்ஸல் நிா்வாகம் தெரிவித்துள்ளது. புதிய உள் விளையாட்டு அரங்கம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேகம் மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழாக்களில், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் கெளரவத் தலைவா் பேராசிரியா் ஏ.கே. நடேசன், நிா்வாக அறங்காவலா் என்.பாா்வதி நடேசன், துணைத் தலைவா் மற்றும் செயலாளா் என்.மதன் காா்த்திக், கவியரசிமதன் காா்த்திக், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள், பேராசிரியா்கள், பணியாளா்கள், மற்றும் மாணவா்கள் ஆகியோா் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com