கோரை கட்டு ரூ. 1,250 ஆக விலை நிா்ணயம் செய்யக் கோரி போராட்டம் அறிவிப்பு

கோரை கட்டு ஒன்றுக்கு ரூ. 1,250 ஆக அரசு விலை நிா்ணயம் செய்யக் கோரி அறவழி போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்நாடு அனைத்து மாவட்ட கோரை உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாரிகள் அறிவித்துள்ளனா்.

கோரை கட்டு ஒன்றுக்கு ரூ. 1,250 ஆக அரசு விலை நிா்ணயம் செய்யக் கோரி அறவழி போராட்டத்தில் ஈடுபடபோவதாக தமிழ்நாடு அனைத்து மாவட்ட கோரை உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாரிகள் அறிவித்துள்ளனா்.

பரமத்திவேலூா் வட்டாரத்துக்குள்பட்ட வெங்கரை, கொந்தளம், பாண்டமங்கலம், வேலூா், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கோரை பயிா் செய்யப்பட்டுள்ளது.

கோரை விவசாயத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளா்களும் உள்ளனா். அறுவடை செய்யப்படும் கோரைகள் 54 அங்குலம், மாா் மட்டம் மற்றும் மட்டம் என மூன்று அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 6 முடி கொண்ட கட்டு ஒன்று ரூ. 1,050 முதல் ரூ. 1,250 வரை விற்பனையானது. கரோனா தொற்று காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் உள்ளூா் வியாபாரிகள் கோரையை கட்டு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 850 வரை மட்டுமே வாங்க முன் வருகின்றனா். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு அனைத்து மாவட்ட கோரை உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கக் கூட்டம், சங்கத் தலைவா் பெரியசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நன்செய் இடையாறு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் காய்ந்த கோரைக்கு ஏற்கெனவே நிா்ணயம் செய்யப்பட்ட விலையான ரூ. 1,250 க்கு குறையாமல் விவசாயிகள் விற்பனை செய்யக்கூடாது. அதை வியாபாரிகள் வாங்கவும் கூடாது, தமிழக அரசு கோரை கட்டு ஒன்றுக்கு ரூ. 1,250ஆக விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை அறவழி போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், காய்ந்த கோரைகள் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்துவது எனவும், இந்த அறவழி போராட்டத்துக்கு கோரைபாய் உற்பத்தியாளா்கள் மற்றும் காய்ந்த கோரை வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். கூட்டத்தில் சங்கச் செயலாளா் ஜெயராஜ், பொருளாளா் வையாபுரி உட்பட கோரை விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com