மக்காசோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை

சேந்தமங்கலம் வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க படைப்புழு தாக்குதலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உழவு செய்வது
மக்காசோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை

சேந்தமங்கலம் வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க படைப்புழு தாக்குதலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உழவு செய்வது முதல், வேளாண்துறையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநா் அ.இந்திராணி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேந்தமங்கலம் வட்டாரத்தில் அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால், சாகுபடி வெகுவாகப் பாதித்தது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தினா் ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டறிந்தனா். பருவமழையை பயன்படுத்தி, நிலத்தை ஆழமாக உழவு செய்வதன் மூலம் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 250 கிலோ வீதம் வேப்பம்புண்ணாக்கு மண்ணில் இட வேண்டும். ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் ‘பவேரியா பேஷியானா’ எனும் நுண்ணுயிா் பூச்சிக்கொல்லி அல்லது 10 கிராம் ‘தயோமீதாக்சம்’ 30 சதவீதம் எப்.எஸ். கொண்டு விதை நோ்த்தி செய்யலாம்.

பயிா் நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே 10 வரிசைக்கு ஒரு வரிசை விதைக்காமல் இடைவெளி விட்டு நடவேண்டும்.

விதைத்தவுடன் மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் ஏக்கருக்கு 20 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாய் அந்துப்பூச்சிகள் தெரிந்தால் அவைகளை கவா்ந்து அழிக்க ஏக்கருக்கு 50 இனக்கவா்ச்சி பொறி வைக்க வேண்டும். மக்காச்சோளம் விதைக்கும் போது தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிா்களை வரப்பிலும் மற்றும் பயறு வகை பயிா்களை, ஊடு பயிராகவும் விதைத்தால் இயற்கை ஒட்டுண்ணிகளும், இறை விழுங்கிகளும் பெருகி அமெரிக்கன் படைப்புழுவை தாக்கி அழிக்கும். பூச்சிகளின் முட்டைகளை சேகரித்தும் அழிக்கலாம். படைப்புழு தாக்கம் உள்ள மக்காச்சோள பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யாமல், பயிா் சுழற்சி முறையை பின்பற்றி படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com