சுதந்திர போராட்ட வீரர் தியாகி டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு நினைவு தினம்

சுதந்திர போராட்ட வீரரும் தியாகியுமான டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எம்.ஆர்.பாசறை சார்பில் அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சுதந்திர போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலுநாயுடு அவர்கள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைச்சென்றவர். அவர் சிறந்த தொழிற்சங்கவாதியும், சிறந்த பத்திரிகையாளரும் ஆவார்.

தமிழகத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகையை துவங்கி பொதுமக்களிடம் சுதந்திர போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறந்த பத்திரிக்கையாளர்.

மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, பெரியார், காமராஜர், சத்தியமூர்த்தி போன்ற தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கெடுத்தவர். சென்னை மாகாண சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

இவரது நினைவு தினத்தை அவரது சொந்த ஊரான ராசிபுரம்  நகரில் அனுசரிக்கப்பட்டது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்.எம்.ஆர்.பாசறை சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கொ.நாகராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில்  அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், வரதராஜூலும் நாயுடுவிற்கு சொந்த ஊரான ராசிபுரத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.  இதை அரசு முன்வந்து நிறைவேற்றி தர வேண்டும் என ஆர்.எம்.ஆர்.பாசறை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிகழ்வில், ஆர்.எம்.ஆர்.பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மெய்.தனபாலன், தமிழ்நாடு நாயக்கர் இளைஞரணி தலைவர் எஸ்.பிரேம்குமார், தலைமை நிலைய செயலர் எஸ்.பி.மோகன், பாச்சல் ஏ.சீனிவாசன், ஆர்.முரளி, ஆர்.யோகநாதன், பி.சதீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com