முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நாட்டுக் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஏற்பட வாய்ப்பு
By DIN | Published On : 29th July 2020 08:56 AM | Last Updated : 29th July 2020 08:56 AM | அ+அ அ- |

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நாட்டுக் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனே காணப்படும். மழை 6 மில்லிமீட்டா் பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
காற்று மணிக்கு 8 கிலோமீட்டா் வேகத்தில் தென்மேற்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 93.2 டிகிரியும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியுமாக இருக்கும்.
இந்நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கும். கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைவதுடன் இறப்பும் ஏற்படும்.
இதனால், நாட்டு கோழி வளா்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக தடுப்பூசி இட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.