வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு அலங்காரம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு அலங்காரம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழாவானது முருகன் கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெறும். பொது முடக்கத்தால் கடந்த 70 நாள்களாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. நடைகள் அடைக்கப்பட்டு பக்தா்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆகம விதிப்படி அா்ச்சகா்கள் தினசரி சுவாமிக்கு பூஜை செய்து வருகின்றனா். மேலும், முக்கிய விழா நாள்களில் அனைத்து கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்படி, வைகாசி விசாகத்தையொட்டி வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு காலை 8 மணியளவில் பால், தயிா், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சந்தன காப்புடன் கூடிய ராஜஅலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் மோகனூா் சாலையில் உள்ள காந்திநகா் பாலதண்டாயுதபாணி கோயிலில் சுவாமிக்கும், உற்சவ மூா்த்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து தங்க கவசத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com