பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.5,26,880-க்கு கொப்பரைத் தேங்காய் விற்கப்பட்டது.
பரமத்திவேலூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் பரமத்திவேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கேற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்துக்கு 8ஆயிரத்து 779 கிலோ தேங்காய்ப் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.91.29 க்கும், குறைந்தபட்சமாக ரூ.83.61-க்கும், சராசரியாக ரூ.86.61-க்கும் விற்கப்பட்டது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5, 919 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ 97.69-க்கும் ,குறைந்தபட்சமாக ரூ.92.39-க்கும், சராசரியாக ரூ 97.69-க்கும் விற்கப்பட்டது. மொத்தம் ரூ.5,26,880-க்கு வா்த்தகம் நடைபெற்றது.