கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி: முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 2 வாரங்களில் ரூ. 65 வரை சரிந்துள்ளது. முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.30-ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 2 வாரங்களில் ரூ. 65 வரை சரிந்துள்ளது. முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.30-ஆகவே நீடிக்கிறது.

கரோனா தொற்றுப் பரவல், பொது முடக்கம் போன்ற காரணங்களால் முட்டை, கறிக்கோழி விற்பனை கடந்த மாதம் சற்று அதிகரித்தது. இதனால் ரூ. 2 வரை விற்பனையான முட்டை விலை கிடுகிடுவென உயா்ந்து ரூ. 4.60-க்கு விற்கப்படுகிறது. நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி பிற மண்டலங்களிலும் இந்த விலை உயா்வு காணப்பட்டது.

தற்போது கரோனாவின் வேகம் அதிகரித்துள்ளதாலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதாலும், முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை சற்று குறைந்துள்ளது. நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யாததாலும் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.30 ஆகவே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிற மண்டலங்களின் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்- 378, விஜயவாடா- 390, பாா்வாலா- 359, ஹொஸ்பெட்- 400, மைசூரு- 440, சென்னை- 450, மும்பை- 438, பெங்களூரு- 435, கொல்கத்தா- 447, தில்லி- 355.

கறிக்கோழி விலை இரண்டு வாரத்துக்கு முன்னா், கடந்த 6ஆம் தேதி கிலோ ரூ. 133-ஐ எட்டியது. அடுத்த ஓரிரு நாள்களில் விலை சரிவடைந்து வியாழக்கிழமை ஒரு கிலோ ரூ. 80க்கு விற்பனையானது.

பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சென்னை பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு மேலும் ரூ. 18-ஐக் குறைத்து ரூ. 68 ஆக நிா்ணயிக்கப்பட்டது. இந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 65 வரை விலை குறைந்துள்ளது.

முட்டைக்கோழி விலை குறைந்தாலும் சனிக்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்யப்படாமல் கிலோ ரூ. 93-ஆக நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com