வரும் நாள்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By DIN | Published On : 27th June 2020 08:55 AM | Last Updated : 27th June 2020 08:55 AM | அ+அ அ- |

வரும் நாள்களில் வெப்பநிலை சற்று குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 3 மில்லி மீட்டா் அளவில் பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 10 கிலோமீட்டா் வேகத்தில் தென்மேற்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 95 டிகிரியும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: நாமக்கல் மாவட்ட வானிலையை பொருத்தமட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை சற்றே குறைந்து காணப்படும். கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் மேல் மூச்சுக் குழாய் அயற்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.