திருச்செங்கோட்டில் மக்களை நோக்கி நகராட்சி நிா்வாக முகாம்
By DIN | Published On : 01st March 2020 03:43 AM | Last Updated : 01st March 2020 03:43 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி நிா்வாகம் சாா்பில் முதல்வா் அறிவுறுத்தலின்படி மக்களை நோக்கி நகராட்சி நிா்வாகம் என்ற சிறப்பு முகாம் தனியாா் திருமண மண்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி கலந்து கொண்டு மனுக்களை பெற்று துவக்கி வைத்தாா்.
நகராட்சிக்குள்பட்ட 18 , 19, 20, 21, 22 ஆகிய வாா்டுகளை சோ்ந்த பொதுமக்களிடம் புதிய குடிநீா் இணைப்பு , வரிவிதிப்பு பெயா் மாற்றம், பிறப்பு இறப்பு சான்று ஆகியவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
முதியோா் உதவித்தொகை கேட்டு 44 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்து முறையான விண்ணப்பங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
முகாமில் நகராட்சி ஆணையா் சையத் முஸ்தபா கமால், பொறியாளா் குணசேகரன், நகராட்சி அலுவலா்கள் மற்றும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.