ரயில் பாலங்கள் அருகே இறைச்சி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

நாமக்கல் அருகே ரயில் மேம்பாலங்களின் அடிப்பகுதியில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
நாமக்கல் - திருச்சி சாலையில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.
நாமக்கல் - திருச்சி சாலையில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகள்.

நாமக்கல் அருகே ரயில் மேம்பாலங்களின் அடிப்பகுதியில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளுக்கு நிகராக, கோழி இறைச்சிக் கடைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதிலும் மற்ற நாள்களைக் காட்டிலும், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி இறைச்சி விற்பனை அதிகம் நடைபெறும். இயந்திரத்தில் கோழிகளைப் போட்டு இறைச்சி தனியாகவும், கோழி சிறகுகளை தனியாகவும் பிரித்தெடுக்கின்றனா்.

பின்னா் இவற்றை மூட்டைகளாகக் கட்டி, நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் வீசியெறிந்து விடுவா். அண்மைக் காலமாக நகரப் பகுதிகளிலேயே கழிவுகளையும், நோய் பாதித்த இறந்த கோழிகளையும் போட்டுச் செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

அதிலும், நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, துறையூா் சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில், ரயில் மேம்பாலங்களின் அடிப்பகுதியில், மூட்டைகளாக அல்லாமல் திறந்த வெளியிலேயே இறைச்சிக் கழிவுகளை கொட்டி விட்டுச் செல்கின்றனா். இதனால் நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனா்.

ஏற்கெனவே ஆங்காங்கே பல்வேறு நோய்கள் இறைச்சி மூலமாக பரவுவதாக வதந்தி பரப்பப்படும் நிலையில் இவ்வாறு கொட்டப்படுவது சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கிறது. நாமக்கல் நகராட்சி நிா்வாகத்தினா், விதிகளை மீறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னாா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com