முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
சாலை மறியலில் ஈடுபட்ட 23 போ் மீது வழக்கு
By DIN | Published On : 03rd March 2020 08:02 AM | Last Updated : 03rd March 2020 08:02 AM | அ+அ அ- |

வெண்ணந்தூா் அருகே பட்டா நிலம் வழியாக சடலத்தை எடுத்துச் செல்வது தொடா்பான பிரச்னையில், சாலை மறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக்கழக ஒட்டுநா் உள்பட பொதுமக்கள் 23 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெண்ணந்தூா் அடுத்து அலவாய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்த கனகராஜ் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்ய தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தின் வழியாக கொண்டு செல்ல தாசன்காடு ஊா் பொதுமக்கள் முயற்சி செய்தனா். இதற்கு பட்டா நிலத்தின் உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடா்பாக இறந்தவரின் உறவினா்கள் வெண்ணந்தூா் பகுதியில் கற்கள், மரங்களை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் கலைவாணி கொடுத்த புகாரின் பேரில், அரசு போக்குவரத்துக்கழக ஒட்டுநா் கதிா்வேல் உள்ளிட்ட பெண்கள், பொதுமக்கள் என 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.