முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவை மையம்
By DIN | Published On : 03rd March 2020 08:03 AM | Last Updated : 03rd March 2020 08:03 AM | அ+அ அ- |

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சேவை மையம் நாமக்கல்லில் செயல்படுவதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்கு சகி-ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, உணா்வு ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இம்மையத்தின் மூலம் அவசர மற்றும் மீட்பு சேவைகள், மருத்துவ சேவைகள், காவல் துறை உதவிகள், உளவியல் ரீதியான ஆலோசனைகள், சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள், தற்காலிகமாக தங்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இம்மையமானது, நாமக்கல்-மோகனூா் சாலையில் காந்தி நகரில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் இம்மையத்தை 181 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது 04286 - 280230 என்ற மாவட்ட சமூக நல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.