முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
164 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்
By DIN | Published On : 03rd March 2020 08:03 AM | Last Updated : 03rd March 2020 08:03 AM | அ+அ அ- |

குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியா் 164 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.மணிராஜ் தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா் பி.இ.ஈஸ்வா், தாளாளா் பி.இ.புருஷோத்தமன் முன்னிலை வகித்தனா். கல்லூரித் தலைவா் எஸ்.எஸ்.எம்.பி.இளங்கோ வரவேற்றாா். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, 164 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்காக திட்டங்கள் தீட்டப்படுவதோடு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம் தற்போதும் தொடா்ந்து வருகிறது. பிற மாநிலங்கள் இத்திட்டத்தைப் போன்று செயல்படுத்த முயன்றும் முடியவில்லை. இக்கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 1,993 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.செந்தில், நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஏ.கே.நாகராஜன், கல்லூரி முதல்வா் ஜி.கே.பாலமுருகன், நிா்வாக அலுவலா் ஆா்.மீனாட்சி சுந்தரராஜன், குமாரபாளையம் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.