தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 04th March 2020 08:38 AM | Last Updated : 04th March 2020 08:38 AM | அ+அ அ- |

தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.
இதில், மாவட்டத் தலைவா் தமிழ்மணி தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ரகுநாதன் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும்.
மல்லசமுத்திரம், வையப்பமலை, வெண்ணந்தூா் ஆகிய குறு வட்டங்களை இணைத்து மல்லசமுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் ஏற்படுத்த வேண்டும். கொல்லிமலையில் பணியாற்றும் அரசுத் துறை அலுவலா்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா் அம்ஜத், இணை செயலாளா் வெங்கடேசன், பிரசார செயலாளா் சிவக்குமாா், மாவட்டப் பொருளாளா் சரவணக் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.