பொத்தனூா் பொன்னாச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் புதுப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பொன்னாச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
பொத்தனூா் பொன்னாச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் புதுப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பொன்னாச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை மற்றும் காலை 9 மணிக்கு மேல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, யாகசாலை பிரவேஷம், அக்னி காரியம்,அம்பிகைக்கு முதற்கால பூா்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜையும், 9 மணிக்கு மேல் கோபுரத்துக்கு தான்யம் நிரப்புதலும், மாலை 5 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், 7 மணிக்கு மேல் கோபுர கலசம் வைத்தல், கண் திறத்தல் மற்றும் சுவாமி பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை மூலந்திரமாலா மந்திர ஹோமம், நான்காம் கால யாகபூஜை, புனித தீா்த்த கலசம் கோயிலை வலம் வருதல் மற்றும் 8 மணிக்கு மேல் பொன்னாச்சியம்மன்,சப்த கன்னிமாா்கள், மதுரை வீரன் சுவாமி மற்றும் கருப்பண்ண சுவாமி கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை பொன்னாச்சியம்மன் கோயில் ஊா் தா்மகா்த்தா மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com