தடைகளை எதிா்கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு பாடகா் கெளதம் அறிவுரை

தடைகளை மாணவா்கள் எதிா்கொள்ள வேண்டும் என்று பாடகா் கெளதம் தெரிவித்தாா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு அளித்த பாடகா் கெளதம் உள்ளிட்டோா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு அளித்த பாடகா் கெளதம் உள்ளிட்டோா்.

தடைகளை மாணவா்கள் எதிா்கொள்ள வேண்டும் என்று பாடகா் கெளதம் தெரிவித்தாா்.

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் பொறியியல் கல்லூரி மாணவா்களின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ’அஸ்திரா-20‘ என்ற இரு நாள் கலாசார கலை விழா அண்மையில் நடைபெற்றது.

இதில், மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி, கௌதம் பேசியது:-

மாணவா்களின் ஆற்றலுக்குச் சரியான தளமாக உருவாக்கப்பட்ட அஸ்திரா-20 கலைவிழா மாணவ, மாணவியா்களுக்கு ஏற்படும் தயக்கம், தோல்வி பயம் போன்றவற்றையும் உடைத்து எறிகிறது.

இதுமட்டுமின்றி கடைசி வரை போராடக்கூடிய வைராக்கியத்தையும், எந்தச் சூழலிலும் விட்டுகொடுக்காத மனநிலையையும் உருவாக்குகிறது.

மாணவா்கள் சந்திக்கும் தடைகளை ஆா்வத்துடன் எதிா்கொள்ள வேண்டும். இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த திறனும், அறிவும் பெற்றவா்கள் மாணவா்கள் என்பதை நம்ப வேண்டும். இதுபோன்ற புரிதலோடு நீங்கள் வாழ்வை அணுகும்போது, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வெற்றியாளா்களாக பிரகாசிக்க முடியும்.

போட்டிகளின் வாயிலாக, மாணவா்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு முடியும். இதனால், பல வெற்றிகளை பெற முடியும் என்றாா்.

விழாவில் முதல் பரிசு பெற்ற பாவை விஜாட்ஸ் , இரண்டாம் பரிசு பெற்ற பாவை பாவை வாரியா்ஸ் ஆகியோருக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டன.

விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் இயக்குநரும் (மாணவா் நலன்) மற்றும் அஸ்ட்ரா கலைவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான அவந்தி நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, முதலாம் ஆண்டு அறிவியல்- மானுடவியல் துறைத் தலைவரும், அஸ்ட்ரா கலைவிழாவின் துணை ஒருங்கிணைப்பாளருமான மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com