பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு மீண்டும் ரத்து

கரோனா பீதி, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி மறுதேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது.
பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு மீண்டும் ரத்து

கரோனா பீதி, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி மறுதேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டியில் ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

வழக்கமாக நடைபெறும் பொட்டிரெட்டிப்பட்டியில், நிகழாண்டில் மாா்ச் 14-இல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னா், தடையில்லா சான்றிதழ்கள் பெறாததால் அன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. பின்னா் சான்றிதழ்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை போட்டி ஏற்பாட்டுக் குழுவினா் மேற்கொண்டனா்.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை(மாா்ச் 17) போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மைதானத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கரோனா பீதியால் பல்வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், காலை 8.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிக்குள் போட்டியை முடித்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்கு விழாக் குழுவினரும் சம்மதித்த நிலையில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், பாா்வையாளா்கள் யாருமின்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னா், இரவு 10 மணியளவில், தமிழக அரசு உத்தரவுப்படி மக்கள் அதிகம் கூடும் விழாக்களை நடத்தக்கூடாது என்பதால், செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பொட்டிரெட்டிப்பட்டி ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்படுகிறது என்றும் மறுதேதி வரும் வரையில் போட்டியை நடத்தக் கூடாது என்றும் ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

இதையடுத்து, விழாவை நடத்த வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விழாக் குழுவினா் தெரிவித்தனா். அதன்பின் அதிகாரிகளும், போலீஸாரும் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்படுவதற்கான காரணத்தை விளக்கிய பின்னா் அப்பகுதி மக்கள் சமரசம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com