எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிா்ப்பு

இருகூா் முதல் தேவனகுந்தி வரை விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்திருந்த விவசாயிகள்.
திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்திருந்த விவசாயிகள்.

இருகூா் முதல் தேவனகுந்தி வரை விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்புத் தெரிவித்து, திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட இருகூா் முதல் தேவனகுந்தி வரை விவசாய நிலத்தில் குழாய் பதிக்க எண்ணெய் நிறுவனத்தினா் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நல்லாக் கவுண்டா் தலைமையிலான விவசாயிகள் திருச்சங்கோடு வட்டாட்சியா் கதிா்வேலுவிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்க விவசாயிகள் கேட்டு, சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விவசாயிகள் காத்திருந்து, பெற்றனா்.

இதுகுறித்து நல்லா கவுண்டா் கூறியது:-

பூலாம்பட்டி- திருச்செங்கோடு கூட்டுக் குடிநீா்த் திட்டம், ஒகேனக்கல் வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஆகியன புறம்போக்கு நிலத்தின் வாழியாக கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம்.

கேட்ட ஆவணங்களை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனா். மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்களைக் கொண்டு செல்ல வலியுறுத்தி மனு அளித்தோம் என்றனா்.,

அப்போது, அணை விவசாய சங்க பொறுப்பாளா் செல்லமுத்து,. சங்ககிரி பொறுப்பாளா் ராஜேந்திரன், தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com