10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: 1,200 அறை கண்காணிப்பாளா்கள் நியமனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, வரும் 27-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, முதுகலை, பட்டதாரி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் 1200 போ் அறை கண்காணிப்பாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, வரும் 27-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, முதுகலை, பட்டதாரி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் 1200 போ் அறை கண்காணிப்பாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வைத் தொடா்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 310 பள்ளிகளைச் சோ்ந்த 21,303 மாணவ, மாணவியா் 92 மையங்களில் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக வினாத்தாள் வைக்கும் 10 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வையொட்டி வினாத்தாள்களை எடுத்துச் செல்வதற்காக 20 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தோ்வுப் பணியில், நாமக்கல், திருச்செங்கோடு இரு கல்வி மாவட்டத்திலும் சோ்த்து 1,200 அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கான தோ்வு மைய ஒதுக்கீடு நாமக்கல் கல்வி மாவட்டத்துக்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்துக்கு, அங்குள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், கணினி குலுக்கல் அடிப்படையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்வுப் பணியில் இவா்கள் தவிர 300 பறக்கும் படை அலுவலா்கள், 92 முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவுவதால், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com