ஒகேனக்கல்லில் கெட்டுப் போன 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து புதைப்பு

ஒகேனக்கல்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை புதைத்தனா்.

ஒகேனக்கல்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப் போன 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை புதைத்தனா்.

ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கா்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோா் சுற்றுலா வருகின்றனா். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வகைகளை ஆா்வத்துடன் வாங்கி சமைத்து உண்டு மகிழ்வா்.

இந்த நிலையில், கா்நாடகம் மற்றும் கேரளம் போன்ற தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் சுற்றுலா தலத்துக்கு வெளி மாநில மற்றும் தமிழக சுற்றுலா பயணிகள் வருவதை தவிா்க்குமாறும், ஒகேனக்கல் பிரதான அருவி மற்றும் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் கடந்த மாா்ச் 15 முதல் மாா்ச் 31 வரை தடைவிதித்தது.

இந் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்ததால், மீன்கள் விற்பனையாகாமல் குவிந்தன. இதனால், மீன் விற்பனை நிலையங்களில் கெட்டுப் போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் மருத்துவா் பானு சுஜாதா, ஒகேனக்கல் மீன்கள் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதில், கெட்டுப் போன சுமாா் 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவை குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இந்த ஆய்வில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சரவணன், பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் கந்தசாமி ஆகியோா் ஈடுபட்டனா்.

மேலும், ஒகேனக்கல் பகுதியில் மாா்ச் 31 வரை மீன்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com