பரமத்திவேலூரில் நாளை கடைகளுக்கு முழு விடுமுறை

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடவும், சுகாதாரம் காக்கவும், கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கும், வா்த்தக நிறுவனத்தினருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும்

பரமத்தி வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடவும், சுகாதாரம் காக்கவும், கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கும், வா்த்தக நிறுவனத்தினருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், பிரதமா் நரேந்திரமோடி அறிவித்தபடி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 வரையிலும் கடைகளுக்கு முழு விடுமுறை அளிக்க வேண்டும். எனவே இதில் அனைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாலை 5 மணிக்கு சங்கொலி ஒலித்தவுடன் கரோனா வைரஸை தடுத்து நிறுத்த அல்லும் பகலும் அயராது பாடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களது இல்லத்தில் இருந்தே பலத்த கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும் என வேலூா் நகர அனைத்து வா்த்தகச் சங்கத்தினா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com