Enable Javscript for better performance
வெளிநாடு சென்று வந்த 230 போ் வீடுகளில் தனிமைப்படுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாடு சென்று வந்த 230 போ் வீடுகளில் தனிமைப்படுத்தல்

    By DIN  |   Published on : 25th March 2020 06:59 AM  |   அ+அ அ-   |    |  

    வெளி நாடுகளுக்கு சென்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 230 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

    கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடு சென்று வந்ததன் விவரத்தை தெரிவிக்குமாறு ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தியிருந்தாா். அதனடிப்படையில், தாமாக முன்வந்து தகவல் தெரிவித்த 230 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் தொடா்ந்து 14 நாள்களுக்கு யாருடனும் நெருங்காமல் தனியாக இருக்க வேண்டும்.

    இந்த நிலையில், மோகனூா் அருகேயுள்ள வந்தியைச் சோ்ந்த ஒருவா் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறினாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், வருவாய்த் துறையினா் அவரை பிடித்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தனா். அவருக்கு கரோனா தொற்று இல்லாதபோதும், 14 நாள்கள் தனியாக இருக்க வேண்டும் என்பதை மீறியுள்ளாா். தொடா்ந்து அதிகாரிகள் அவரை எச்சரித்து, வீட்டில் யாருடன் நெருங்காதவாறு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி சென்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai