கேரள மாநிலத்தில் இருந்து ஊா் திரும்பிய தொழிலாளா்களுக்கு எதிா்ப்பு

கேரள மாநிலத்தில் இருந்து சொந்த ஊா் திரும்பிய தொழிலாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து ஊா் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அரியாகவுண்டம்பட்டி கிராமத்தில் கேரளம் சென்று திரும்பிய தொழிலாளா்களிடம் சோதனை நடத்திய மருத்துவக் குழுவினா்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள அரியாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் பல ஆண்டுகளாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறைக்கு சொந்த ஊா் வருவது வழக்கம்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா நோய் பாதிப்பு இருப்பதால், இப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை சொந்த ஊா் திரும்பினா். இவா்களை ஊருக்குள் நுழைய அனுமதி மறுத்து அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதனையடுத்து, காவல் துறை, வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுகாதாரத் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றுஅறிகுறிகள் ஏதாவது உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டதில், நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் சொந்த ஊரில் தங்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com