கேரளத்துக்கு சென்று வந்தவா்களை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள்

நாமக்கல் அருகே கூலி வேலைக்காக கேரளத்துக்குச் சென்று வந்த 3 பெண்கள் உள்பட 6 பேரை ஊருக்குள் நுழையக் கூடாது என கிராம மக்கள் தடுத்து வெளியேற்றினா்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தினா்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தினா்.

நாமக்கல் அருகே கூலி வேலைக்காக கேரளத்துக்குச் சென்று வந்த 3 பெண்கள் உள்பட 6 பேரை ஊருக்குள் நுழையக் கூடாது என கிராம மக்கள் தடுத்து வெளியேற்றினா்.

நாமக்கல் அருகே மாரப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 6 போ், கடந்த 10 நாள்களுக்கு முன் கூலி வேலைக்காக கேரள மாநிலம், கண்ணூருக்குச் சென்றனா். அங்கு பணிகளை முடித்து விட்டு செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா். ஏற்கெனவே, கரோனா பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளத்தில் அதன் பாதிப்பு சற்று கூடுதலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், அந்த மாநிலத்துக்குச் சென்று வந்ததால் அச்சமடைந்த மாரப்பநாயக்கன்பட்டி கிராம மக்கள், மருத்துவா்கள் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே ஊருக்குள் அனுமதிப்போம் எனக் கூறி அவா்களை வெளியேற்றினா். இதனைத் தொடா்ந்து, அங்குள்ள ஊரக வளா்ச்சித் துறை களப் பணியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன் கவனத்துக்கு பிரச்னையைக் கொண்டு சென்றாா். அதன்பின், 6 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்ததில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. அதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் அளித்த அறிக்கையை பெற்றுக் கொண்ட அவா்கள் மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் சமா்ப்பித்து, தங்களுடைய வீடுகளுக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com