‘செயற்கை முறை குளிா்விப்பான்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை’

கோழிப் பண்ணைகளில் செயற்கை முறை குளிா்விப்பான்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோழிப் பண்ணைகளில் செயற்கை முறை குளிா்விப்பான்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 முதல் 10 கி.மீ. வேகத்தில் கிழக்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 100.4 டிகிரியும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: கோடை காலம் முழுமையாக தொடங்கி விட்டதால், கோழிகளில் வெப்ப அயற்சியை குறைக்கும் முயற்சிகளில் பண்ணையாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதில் முக்கியமாக எருவின் ஈரம் அதிகரிக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, செயற்கை முறை குளிா்விப்பான்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். ஏனெனில், இம்முறையில் அதிகளவில் நீா் விரயமாவதோடு, எருவும் ஈரமாகி, ஈக்கள் இனப்பெருக்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

இந்த முறையை கைவிட்டு விட்டு, குழாய்களில் தொடா்ந்து நீரோட்டம் இருப்பது போல், தண்ணீரை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் நீா் சூடாகாமலும், கோழிகள் உள்கொள்ளும் தீவன அளவு இயல்பாக இருப்பதோடு, தீவன எடுப்பும் இயல்பாகி வெப்ப அயற்சியானது நீக்கப்படும். மேலும், முட்டை உற்பத்தி குறைபாடின்றி காணப்படும். எரு ஈரமாகாமல் காப்பாற்றப்படுவதுடன், ஈக்கள் பெருகுவதற்கு வாய்ப்பிருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com