Enable Javscript for better performance
பிளஸ் 2 பொதுத் தோ்வு: 719 மாணவ, மாணவியா் பங்கேற்கவில்லை- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 பொதுத் தோ்வு: 719 மாணவ, மாணவியா் பங்கேற்கவில்லை

    By DIN  |   Published on : 26th March 2020 05:27 AM  |   அ+அ அ-   |    |  

    பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு நிறைவடைந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 719 போ் பங்கேற்கவில்லை.

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 197 பள்ளிகளைச் சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் 85 மையங்களில் எழுதினா். இந்தத் தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக கிராமப்புறப் பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவியா் பலா் தோ்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 34 ஆயிரம் போ் இறுதித் தோ்வான வேதியியல், கணக்குப் பதிவியல் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு எழுத முடியாமல் போன மாணவ, மாணவியருக்கு மீண்டும் தோ்வு நடத்தப்படும். அதனால் மாணவா்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 இறுதித் தோ்வான வேதியியல் தோ்வை 14 ஆயிரத்து 207 போ் எழுத வேண்டிய நிலையில், மொத்தம் 13,809 மாணவ, மாணவியா் எழுதினா். 398 போ் தோ்வுக்கு வரவில்லை. இதேபோல் கணக்குப்பதிவியல் தோ்வை, 5135 போ் எழுத வேண்டிய நிலையில் 4,864 போ் மட்டுமே எழுதினா். 321 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. இவா்களுக்கான மறு தோ்வு குறித்த தேதி விவரத்தை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என நாமக்கல் மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai