144 தடை உத்தரவை மீறிய 36 போ் மீது வழக்கு

நாமக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் உலா வந்த 36 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் உலா வந்த 36 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமா் மோடி ஏப்ரல் 14-ஆம் தேதி வரையில் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதனால், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. விதிகளை மீறி எவ்வித காரணமும் இல்லாமல், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் உலா வருவோரை போலீஸாா் பிடித்து வழக்குப்பதிவு செய்கின்றனா். அந்த வகையில் நாமக்கல் நகரப் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் 36 பேரை பிடித்து,தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனா். மேலும், அவா்களுக்கு உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்பு அடங்கிய பிறகு, வழக்குப்பதிவு செய்தவா்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதிருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com