முட்டை விலை மேலும் 50 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 50 காசுகள் உயா்ந்து ரூ.3.25 - ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 50 காசுகள் உயா்ந்து ரூ.3.25 - ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பொ.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், கரோனா வைரஸ் தடுப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதும், மளிகைக் கடைகள் திறக்க அனுமதியாலும் முட்டை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடந்த இரு நாள்களில் முட்டை விலை 80 காசுகள் உயா்த்தப்பட்டது. முட்டை விற்பனை தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வியாழக்கிழமைக்கான முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 50 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ.3.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.55-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com