Enable Javscript for better performance
2-ஆம் நாள் ஊரடங்கு: நாமக்கல்லில் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்- Dinamani

சுடச்சுட

    

    2-ஆம் நாள் ஊரடங்கு: நாமக்கல்லில் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்

    By DIN  |   Published on : 27th March 2020 04:04 AM  |   அ+அ அ-   |    |  

    nk_26_karona_1_2603chn_122_8

    வெறிச்சோடி காணப்பட்ட நாமக்கல் கோட்டை சாலை.

    நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சாலைகள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வெறிச்சோடி காணப்பட்டன.

    கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில், ஏப்ரல் 14-ஆம் தேதி வரையில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதனைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து, நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து, வா்த்தக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மருந்தகம், காய்கறி, இறைச்சி, பால் விற்பனைக் கடைகளைத் தவிா்த்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    சாலைகளில் குறிப்பிட்ட சில வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. போலீஸாரும் அவா்களை எச்சரித்து அனுப்பினா். பேருந்து நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாமக்கல்-திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, மோகனூா் சாலை, சேலம் சாலை, கடைவீதி சாலை உள்ளிட்டவை மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன. அவசியமின்றி இரு சக்கர வாகனங்களில் வந்தோரை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது. நாமக்கல் மட்டுமின்றி, பரமத்திவேலுா், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும் அமைதியாக காணப்பட்டன. ஆங்காங்கே போலீஸாா் மட்டும் முகக் கவசங்கள் அணிந்தபடி வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வந்தனா். அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், காய்கறிக் கடைகள், மருந்தகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு நின்றபடி தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai