காய்கறி வாங்க கட்டுப்பாடு: இடைவெளி விட்டு நின்ற மக்கள்

நாமக்கல்லில், சாலையோர கடைகளில் இடைவெளி விட்டு நின்றபடி மக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.
நாமக்கல் பூங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையோரக் கடைகளில் காய்கறிகளை வாங்கும் மக்கள்.
நாமக்கல் பூங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையோரக் கடைகளில் காய்கறிகளை வாங்கும் மக்கள்.

நாமக்கல்லில், சாலையோர கடைகளில் இடைவெளி விட்டு நின்றபடி மக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகம் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

நாமக்கல் உழவா் சந்தை மூடப்பட்டதால், கோட்டை சாலையில் கடை அமைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனை செய்து வந்தனா். அதிகளவில் மக்கள் கூடுவதால் தேவையற்ற நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், நாமக்கல் பூங்கா சாலையில், வியாழக்கிழமை 78 காய்கறிக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு கடைக்கும் ஒருவா் நின்று வாங்கும் வகையில் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களும் நெரிசலின்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com