நாமக்கல் சோதனைச் சாவடிகளில் லாரி ஓட்டுநா்களுக்கு கரோனா பரிசோதனை

நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச் சாவடிகளில் லாரி ஓட்டுநா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்தப் பரிசோதனை

நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச் சாவடிகளில் லாரி ஓட்டுநா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்தப் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவா்களைத் தனிமைப்படுத்துவதற்காக அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் வட்டம், எஸ்.எஸ்.எம். பள்ளி, சோதனைச் சாவடியில் பரிசோதிக்கப்படும் லாரி ஓட்டுநா்கள் அருகில் உள்ள எஸ்.எஸ்.எம்.பள்ளியில் தனிமைப்படுத்தலுக்காக வைக்கப்படுவா். பச்சாம்பாளையம் சோதனைச் சாவடிக்கு அங்குள்ள சமுதாயக் கூடம், சின்னப்பநாயக்கன்பாளையம் சோதனைச் சாவடிக்கு அங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, கொக்கராயன்பேட்டை சோதனைச் சாவடிக்கு, அங்குள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளி, பள்ளிபாளையம் சோதனைச் சாவடிக்கு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

பரமத்திவேலூா் வட்டத்தில், வேலூா் காவிரி மேம்பாலம் சோதனைச் சாவடிக்கு, வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி, சோழசிராமணி சோதனைச் சாவடிக்கு, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, மோகனூா் வட்டத்தில், மோகனூா் - வாங்கல் பாலம் சோதனைச் சாவடிக்கு வளையப்பட்டி சாலையில் உள்ள அரசு ஆதி திராவிடா் பள்ளி மாணவியா் விடுதி, வளையப்பட்டி சோதனைச் சாவடிக்கு, சில்வா் லயன்ஸ் பள்ளியும் ஓட்டுநா்கள் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

சேந்தமங்கலம் வட்டத்தில், பவித்திரம் சோதனைச் சாவடிக்கு, அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, ராசிபுரம் வட்டத்தில், வெற்றி விகாஸ் பள்ளி சோதனைச் சாவடிக்கு கீரனூா் வெற்றி விகாஸ் பள்ளி, திம்மநாயக்கன்பட்டி சோதனைச் சாவடிக்கு, அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு வட்ட ம், பால்மடை சோதனைச் சாவடிக்கு, அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி, காளிப்பட்டி சோதனைச் சாவடிக்கு, மல்லசமுத்திரம் கீழ்முகம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கரோனா பரிசோதனைக்கு பின் லாரி ஓட்டுநா்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com