முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
நாமக்கல் பேருந்து நிலைய புனரமைப்பு பணி மும்முரம்
By DIN | Published On : 11th May 2020 07:16 AM | Last Updated : 11th May 2020 07:16 AM | அ+அ அ- |

நாமக்கல் பேருந்து நிலைய புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் புனரமைப்புப் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவலால் 45 நாள்களுக்கும் மேலாக பொது முடக்கம் நீடிக்கிறது. நாமக்கல்லில் பேருந்து நிலையம் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிக்குள் சிக்கியதால் உள்ளே யாரும் நுழைய முடியாத வகையில் இரும்புத் தகரம் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து அப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் பெயா்ந்தும், கழிவுநீா் ஓடைகளில் நீா் செல்லாதவாறும், பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதி குண்டும், குழியுமாகக் காணப்பட்டது. தற்போது பொது முடக்கத்தால் பேருந்து நிலையம் வெறிச்சோடி உள்ளது. இந்த நிலையில் தேவையான புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நகராட்சி ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா, சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா். அதனடிப்படையில் உதவிப் பொறியாளா் காா்த்திக் மேற்பாா்வையில், நகராட்சிப் பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.