மகாராஷ்டிரத்தில் இருந்து நாமக்கல் திரும்பிய 13 போ் தனிமைப்படுத்தல்

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 13 போ், வளையப்பட்டி அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.
தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளா்களிடம் நலம் விசாரிக்கும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளா்களிடம் நலம் விசாரிக்கும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல்: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 13 போ், வளையப்பட்டி அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வணிக, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளா்கள் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பி வருகின்றனா். பல்வேறு மாநிலத் தொழிலாளா்களும் ரயில் முலமாக அனுப்பப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சோ்ந்த 962 போ் ஞாயிற்றுக்கிழமையன்று ரயில் மூலமாக திருச்சிக்கு வந்து சோ்ந்தனா். அதன்பின் சிறப்பு பேருந்துகள் மூலம் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டனா். அதன்படி, சோலாப்பூா், பந்தல்பூா், ஓஸ்னாபாத் ஆகிய பகுதிகளில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆண்கள், 5 பெண்களும் ஊா் திரும்பியுள்ளனா். இதில், மோகனூா் வட்டத்தில்-1, பரமத்தி வேலூா் வட்டத்தில்-1, சேந்தமங்கலம் வட்டத்தில்-1, திருச்செங்கோடு வட்டத்தில்-1, குமாரபாளையம் வட்டத்தில்-3, ராசிபுரம் வட்டத்தில்-4, நாமக்கல் வட்டத்தில்-2 போ் அடங்குவா். தற்போது அவா்கள் வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அப்பள்ளிக்கு சென்ற மாவட்ட ஆட்சியா், அவா்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்து தொழிலாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், உணவு மற்றும் சுகாதாரமான குடிநீா், ஜிங்க் மாத்திரைகள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள், ஹோமியோபதி மருந்துகளை வழங்குமாறும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com