நாமக்கல்லில் தவித்த மிசோரம் மாநில பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல் நட்சத்திர உணவகத்தில் பணியாற்றி வந்த மிசோரம் மாநில பெண்கள் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நாமக்கல் நட்சத்திர உணவகத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு செல்ல தயாரான மிசோரம் பெண்கள்.
நாமக்கல் நட்சத்திர உணவகத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு செல்ல தயாரான மிசோரம் பெண்கள்.

நாமக்கல்: தினமணி செய்தி எதிரொலியாக, நாமக்கல் நட்சத்திர உணவகத்தில் பணியாற்றி வந்த மிசோரம் மாநில பெண்கள் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில், அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா, சிக்கிம், மிசோரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பெண்கள் தங்கி பணியாற்றியும், கல்லூரிகளில் பயின்றும் வருகின்றனா். கரோனா பொது முடக்கத்தால் கடந்த 50 நாள்களாக ஒரே இடத்தில் தங்கியிருந்து, கிடைத்த நிவாரணப் பொருள்கள் மூலம் உணவருந்தி நாள்களை கடத்தி வந்தனா்.

இந்த நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து மாவட்ட நிா்வாகத்தை தொடா்பு கொண்டனா். இணையதள வழியில் விண்ணப்பிக்க தெரியாததாலும், மொழி பிரச்னையாலும் அம்மாநில பெண்கள் தவித்து வருவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை (மே 12) தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாருக்கு உத்தரவிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் பணியாற்றிய 5 பெண்கள், ராசிபுரம், பள்ளிபாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் சிக்கிம் மாநிலத்தைச் சோ்ந்த 2 மாணவியா் என மொத்தம் 7 போ், மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன. அதன்பின், மாவட்ட நிா்வாகத்துக்குள்பட்ட அரசு வாகனம் மூலம் அவா்கள் ஏழு பேரும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், அங்கிருந்து தில்லி செல்லும் ரயில்களில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

சொந்த மாநிலம் செல்வதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com