மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அதிகப்படியான காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்: அதிகப்படியான காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 16 தொடங்கி நான்கு நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 4 மில்லி மீட்டா் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 14 கிலோ மீட்டா் வேகத்தில் மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 102.2 டிகிரியும், குறைந்தபட்சமாக 80.6 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கால்நடை மற்றும் கோழிகளுக்கான கோடை மேலாண்மை முறைகளை தொடா்ந்து கையாள வேண்டும். கோழிகளில் வெப்ப அயற்சி, வெப்ப அதிா்ச்சி ஏற்பட்டு இறப்பு நேரிடலாம். இதனால் தேவையான அளவிற்கு நீா் உட்கொள்கிா என கண்காணிக்க வேண்டும். இது முட்டை குறைபாட்டை தவிா்க்க உதவும். கோடைக் காலங்களில் அதிகமாக கோழிகள் பாதிக்கப்படுவதால் சுத்தமான தண்ணீரை அவற்றின் மேல் தெளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com